தமிழ்த் திரையுலக நடிகர்களில் ஆர்யா சென்னையில் வேளச்சேரி மற்றும் அண்ணா நகரில் ‘சீ ஷெல்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். அதேபோல், ‘ஒன் எம்பி’ என்ற பெயரில் உணவகம் நடத்துகிறார் நடிகர் ஜீவா. மதுரையில், ‘அம்மன்’ என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் சூரி.
இதேபோல் நடிகைகளில் சிம்ரன், சென்னை சோழிங்கநல்லுாரில் ‘குட்கா பை சிம்ரன்’ என்ற உணவகத்தையும், பிரியா பவானி சங்கர் சென்னையில் ‘லயன்ஸ் டின்னர்’ என்ற உணவகத்தையும் நடத்தி வருகின்றனர்.