‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. தற்போது ‘இட்லி கடை’ படத்துக்காக மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளார்.
“இந்தப் படத்துக்காக முதன்முதலாக மாட்டுச் சாணத்தை என் கைகளால் தொட்டுச் சுத்தம் செய்தேன். சொல்லப் போனால் தேசிய விருது பெறுவதற்கு முதல் நாளன்றுதான் இக்காட்சியைப் படமாக்கினார்கள்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் நித்யா மேனன்.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. இதில் சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்திலும் தனக்கு அருமையான கதாபாத்திரம் அமைந்துள்ளது என்றும் தனுஷ் திறமையான நடிகர் மட்டுமல்ல, சாதிக்கத் துடிக்கும் நல்ல இயக்குநர் என்றும் பாராட்டுகிறார் நித்யா மேனன்.

