தாம் அறிமுகமான படத்திலும், இரண்டாவது படத்திலும் தனது நடிப்பைப் பார்க்கும்போது வெட்கமாக இருப்பதாகக் கூறியுள்ளார் சமந்தா.
இவர் தற்போது தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். ‘சுபம்’ என்ற தலைப்பில் சமந்தா தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போதுதான் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“அறிமுகமான புதிதில் நான் ஏன் இவ்வளவு மோசமாக நடித்தேன் என்று இப்போது யோசிக்கிறேன். ஆனால் ‘சுபம்’ படத்தில், பல இளம் நடிகர்களின் நடிப்பைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன்.
“அவர்களால் தயக்கம் இன்றியும் மிக யதார்த்தமாகவும் நடிப்பை வெளிப்படுத்த முடிகிறது. திறமைசாலிகளுக்கு எப்போதுமே நல்ல எதிர்காலம் இருக்கும்,” என மனதாரப் பாராட்டினார் சமந்தா.

