தன் மீது மற்றவர்களுக்கு உள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்க கடமைப்பட்டுள்ளதாக நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
எப்போதும் தனக்கு கிடைத்து வரும் ஆதரவும் ஊக்கமும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்துக்கும் விடாமுயற்சிக்கும் உந்துசக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் விளையாட்டில் புதிய சாதனைகளைப் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது.
“இந்தப் பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல உங்களைப் பற்றியதும் தான்,” என்று அஜித் மேலும் கூறியுள்ளார்.