மலேசியாவில் நடைபெற்ற விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் விஜய் குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு விபத்தால் படுத்த படுக்கையாக இருந்த என் மகனை மீண்டும் நடக்க வைத்தவர் விஜய்தான். அதற்காக விஜய்க்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.
“விஜய் அடிக்கடி, ‘என் பேச்சை நானே கேட்கமாட்டேன்’ என்று சொல்வார். அதாவது ஒருமுறை முடிவு செய்துவிட்டால் அதை மாற்றிக்கொள்ள மாட்டார்.
“அப்படி மாற்றினால் விமர்சனங்கள் வரும் என்பது தெரியும். ஆனாலும், அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று நான் அவரிடம் கோரிக்கை வைக்கிறேன்.
“நடிகர் சங்கக் கட்டடப் பணிக்காகப் பணம் கேட்டபோது, மறுப்பேதும் சொல்லாமல் ரூ.1 கோடி நன்கொடை கொடுத்தார்,” என்றும் நாசர் விஜய்யின் பெருந்தன்மையை நினைவுகூர்ந்தார்.

