எனக்கு நான் மட்டுமே போட்டி: கிரித்தி ஷெட்டி

1 mins read
879e19ef-ba35-4174-aa29-d543406ab933
கிரித்தி ஷெட்டி. - இன்ஸ்டகிராம்

தாம் யாரையும் இதுவரை போட்டியாகக் கருதியதில்லை என்றும் இனிமேலும் அவ்வாறு நினைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார் நடிகை கிரித்தி ஷெட்டி.

தான் சினிமா நடிகையாகாமல் இருந்திருந்தால் மருத்துவராக வேண்டும் என்பது தனது கனவாக இருந்தது என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை எனக்கு நான் மட்டுமே போட்டி. எனக்கான கதைகள் நிச்சயம் என்னைத் தேடி வரும் என்று நம்புகிறேன். அதை யாரும் தட்டிப் பறித்துவிட முடியாது.

“திரையுலகில் நல்ல பெயர் எடுக்க நிறைய உழைக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்கிறேன்,” என்கிறார் கிரித்தி.

தனக்குப் பிடித்த நடிகைகளின் பட்டியலில் மறைந்த நடிகைகள் ஸ்ரீதேவி, சௌந்தர்யா ஆகியோரும் உள்ளதாகச் சொல்கிறார்.

“இவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பாக நடிக்க முடிகிறது என்று பலமுறை வியந்து போயிருக்கிறேன்.

“அவர்களைப் போல் நடித்து பெயர் எடுக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்,” என்று கூறியுள்ளார் கிரித்தி ஷெட்டி.

குறிப்புச் சொற்கள்