தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நான் பொதுச் சொத்தல்ல’: டாப்சி காட்டம்

1 mins read
bf75eeb3-e64b-4522-b910-240b7e932ca9
நடிகை டாப்சி. - படம்: ஊடகம்

திரைப்பட நிகழ்வுகள், கடைத் திறப்பு விழா, கோயில்களுக்குச் செல்லும் நடிகர், நடிகைகளோடு செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முண்டியடிப்பது வழக்கமானதுதான்.

தங்கள் மனநிலைக்கு ஏற்ப சிலர் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள், சிலர் அதை விரும்பாமல் வேகமாகச் சென்று விடுவார்கள். ஒரு சிலர் தங்களது விருப்பமின்றி எடுப்பவர்களின் கேமராக்களைப் பிடுங்கி தூக்கி வீசி தங்களது கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இதனால் அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு அடங்குவதும் உண்டு.

அந்த வகையில், பிரபலங்கள் எங்கு சென்றாலும் அவர்களைத் துரத்திச் சென்று புகைப்படம், காணொளிகள் எடுப்பவர்கள் ‘பாப்பரசி’ எனக் கூறப்படுகிறார்கள். இந்நிலையில், இவர்கள் குறித்து நடிகை டாப்சி காட்டமாகப் பேசியுள்ளார்.

“நான் பிரபலமான ஒரு நடிகை மட்டுமே. பொதுச் சொத்து கிடையாது. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

எங்களை எங்கள் விருப்பப்படி சுதந்திரமாகச் சென்று வர விடுங்கள். கேமராக்களுடன் துரத்தாதீர்கள்.

நான் முதலில் ஒரு பெண். அதன்பிறகுதான் நடிகை. நான் இப்படிச் சொல்வதால், இது எனக்கு ஏற்ற தொழில் இல்லை என சிலர் நினைக்கலாம். ஆனால், நடிப்பென்பது நான் விரும்பும் தொழில்,” எனக் கூறியுள்ளார் டாப்சி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்