தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய வீரர்களின் வீரம், தியாகத்தை பெருமையாகக் கருதுகிறேன்: இளையராஜா

1 mins read
b6f17e70-0eb1-41cd-a1dd-fdf86ac84438
இளையராஜா. - படம்: ஊடகம்

தனது இசைக்கச்சேரி வருவாயையும் ஒரு மாதச் சம்பளத்தையும் தேசிய தற்காப்பு நிதிக்கு சிறிய நன்கொடையாக வழங்க முடிவு எடுத்துள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஓர் இந்தியராகவும் மக்களவை உறுப்பினராகவும் நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் வீரர்களின் ‘வலிய’ முயற்சிகளை ஆதரிக்க தாம் இம்முடிவை எடுத்துள்ளதாகவும் இந்திய தாயகத்தின் எல்லைகளைப் பாதுகாக்கும் இந்திய வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் தாம் எப்போதும் பெருமையாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த ஆண்டின் தொடக்கத்தில், நான் என் முதல் ‘சிம்பொனி’யை (Symphony) உருவாக்கி, அதற்கு ‘வலியன்ட்’ எனப் பெயரிட்டேன்.

“மே மாதத்தில் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்திய வீரர்கள் காட்டிய அதீத துணிச்சல், துல்லியமான பதிலடி, எனது இசையின் பெயருக்கு நிஜ அர்த்தம் தந்தது,” என்று இளையராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்