தனது அறிமுகப் படமான ‘பீனிக்ஸ் வீழான்’ வெற்றியைத் தொடர்ந்து உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.
விமர்சகர்கள் சிலர், சூர்யா முதல் படத்திலேயே மிகவும் அலட்டிக்கொள்வதாக விமர்சித்திருந்தனர். ஆனால், அதற்கு சூர்யா சேதுபதி தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா சேதுபதி, பல்வேறு விமர்சனங்களைக் கடந்து படம் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார்.
“இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருமே எனக்கு அவ்வளவு பக்கபலமாக இருந்தனர். மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. உண்மையில் எனக்குப் பேச்சே வரவில்லை,” என்றார் சூர்யா சேதுபதி.