தாம் நடிக்கத் தொடங்கிய புதிதில், நிறப்பாகுபாடு, உருவக்கேலிக்கு ஆளானதாக நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
அண்மையில், ‘திரைப்படத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், நிறத்தை வைத்து ஒரு நடிகையின் தரத்தை நிர்ணயிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
“என்னை கறுப்புப் பூனை எனப் பலர் கிண்டல் செய்தனர். இறுதியில் அவர்களே எனது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதுதான் வாழ்க்கை.
“திரைப்படத்துறையில் நீங்கள் எத்தகைய உருவத்துடன் அறிமுகமானாலும் கேலி செய்யப்படுவீர்கள். ஒல்லியாக, உடல் பருமனாக, கறுப்பாக என எப்படி இருந்தாலும், கேலி, கிண்டல்களில் இருந்த தப்ப முடியாது.
“நான் இவ்வாறு நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன். சில சமயங்களில் நான் அவ்வளவு அழகாக இல்லையோ என்று எனக்கே தோன்றும். ஆனால், உழைப்பை நம்பி வந்ததால் சாதிக்க முடிந்தது,” என்று கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.