ஒரு படத்தை முடித்த பிறகே, அடுத்த படத்தில் கவனம் செலுத்துவது என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் தற்போது ‘மார்ஷல்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
“நான் ஏற்கெனவே ரவி மோகனுடன் இணைந்து நடித்த ‘ஜீனி’ படம் வெளியீடு காணத் தயாராக உள்ளது. அதேபோல் மலையாளத்தில் ஃபகத் ஃபாசிலுடன் ‘ஓடும் குதிரை சாடும் குதிரை’, நஸ்லெனுடன் ‘லோகா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இரு படங்களுமே இம்மாத இறுதிக்குள் வெளியீடு காண உள்ளன.
“தற்போது என் கவனம் முழுவதும் ‘மார்ஷல்’ படத்தில் மட்டுமே உள்ளது. என்னுடைய படங்களை மிகக் கவனமாகத் தேர்வு செய்கிறேன்.
“எனது படத் தேர்விலும் கொள்கை முடிவிலும் யாரும் தலையிடுவதில்லை,” என்கிறார் கல்யாணி.