நடிகர் விஜய் ஆண்டனி ‘பூக்கி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘மார்கன்’.
இதில் விஜய் ஆண்டனியின் மூத்த சகோதரி மகன் அஜய் திஷான் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்துள்ளார்.
'பூக்கி’ படத்தில் அஜய் திஷான்தான் கதாநாயகன். இப்படத்தின் வெளியீட்டையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, அனைத்துத் தரப்பினரும் இதைப் பார்க்கலாம் என்றார்.
“இது இளையர்களுக்கான படம்போல் தோன்றினாலும் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும், அனைவருக்கும் புரிகின்ற, பிடிக்கின்றப் படமாகவும் இருக்கும்.
“படப்பிடிப்புகள் முடிந்த பிறகு நான் இந்தப் படத்தை சிலமுறை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் சில காட்சிகள் என்னை அழவைத்தன,” என்றார் விஜய் ஆண்டனி.
இந்தக் காரணத்தால்தான் படம் அனைவரையும் கவரும் என்று என்னால் உறுதியளிக்க முடிகிறது எனக் குறிப்பிட்ட அவர், ‘பூக்கி’ என்ற தலைப்பைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றார்.
அந்தக் காலத்தில் பெண்கள் தம் கணவரை சாமி, நாதா, அத்தான் என்று அழைத்தனர். அதுதான் தற்போது ‘பூக்கி’யாக மாறியுள்ளது என்று விளக்கம் அளித்தார் விஜய் ஆண்டனி.

