விஜய்யுடன் நான் நடிக்கவில்லை : சிவராஜ் குமார்

1 mins read
39524d25-3f5b-4a7c-b88e-d720abbfcd72
சிவராஜ் குமார். - படம்: ஊடகம்

தமிழில் தொடர்ந்து நடித்து வரும் கன்னட நடிகர் சிவராஜ் குமார், விஜய் படத்தில் இருந்து விலகி விட்டதாக அறிவித்து இருக்கிறார்.

கன்னட நடிகர் சிவராஜ் குமார் கன்னட சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தாலும் அண்மைக்காலமாக தமிழில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படங்களைத் தொடர்ந்து தமிழில் அடுத்து வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் 69வது படத்திலும் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அண்மையில் சிவராஜ் குமார் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதேசமயம் கால்ஷீட்டைப் பொறுத்துதான் நடிப்பது உறுதியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போதைய பேட்டியில், “சில தினங்களுக்கு முன்பு வினோத்தைச் சந்தித்து விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமில்லை. விரைவில் நல்ல கதையுடன் வேறொரு படத்தில் சந்திப்போம் என்று கூறிவிட்டேன்,” என தெரிவித்துள்ளார் சிவராஜ் குமார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்