‘வீர தீர சூரன் 2’ படத்தின் கதையை விக்ரமுக்காக எழுதவில்லை என இயக்குநர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் 62வது படமாக உருவாகிறது ‘வீர தீர சூரன் 2’. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.
முதலில் இரண்டாம் பாகம்தான் வெளியாகுமாம். அதிலும், இரண்டாம் பாகம் வெளியான பிறகே முந்திய பாகத்தைப் படமாக்க உள்ளதாகத் தகவல்.
இப்படத்தில் விக்ரம் கிராமியத் தோற்றத்தில் ‘காளி’ என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்தவராக நடிக்கிறார். படத்தின் குறு முன்னோட்டக் காணொளித் தொகுப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்த வாரம் படம் வெளியாகும் நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குநர் அருண்குமார், ‘வீர தீர சூரன் 2’ படத்தின் கதையை, தாம் விக்ரமுக்காக எழுதவில்லை என்று தெரிவித்துள்ளார்.
“விக்ரமிடம் கதையை விவரிக்கும்போதே அவருக்காக எழுதவில்லை என்பதை தெரிவித்துவிட்டேன். பின்னர், படத்திற்கான முதல் 20 நிமிடக் கதையை அவரிடம் கூறினேன். அவருக்குப் பிடித்துவிட்டது. மீதமுள்ள கதையையும் எழுதிவிட்டு வாருங்கள் என்றார். அதன்பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என்று தயக்கமின்றிக் கூறினார்.
“அவரது ஒத்துழைப்பால் படத்தின் மீதிக் கதையை எழுதவும் படத்தைச் சிறப்பாக இயக்கவும் முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார் அருண்குமார்.முதலில் இரண்டாம் பாகம்தான் வெளியாகுமாம். அதிலும், இரண்டாம் பாகம் வெளியான பிறகே முந்திய பாகத்தைப் படமாக்க உள்ளதாகத் தகவல்.