நயன்தாராவுடன் நடிப்பேன் என நினைக்கவில்லை: கவின் நெகிழ்ச்சி

நயன்தாராவுடன் நடிப்பேன் என நினைக்கவில்லை: கவின் நெகிழ்ச்சி

1 mins read
0a30e446-0f03-4d03-bc7f-020b956a5e7b
‘ஹாய்’ திரைப்படக் காட்சியில் கவின், நயன்தாரா. -   படம்: தினமலர்
Google News Preferred Icon

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் இந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், ராதிகா சரத்குமார், வி.டி.வி. கணேஷ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

வித்தியாசமான காதல் கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்பட விழாவில் பேசிய நடிகர் கவின், திரையரங்கில் தான் படம் பார்த்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“நண்பர்களுடன் ஒரு ரசிகராகச் சென்று தனுஷ், நயன்தாரா நடித்த ‘யாரடி நீ மோகினி’ படத்தைத் திரையரங்கில் பார்த்ததாகக் கவின் தெரிவித்தார்.

“அந்தக் கவின் இன்று நயன்தாராவுடன் இணைந்து நடிப்பார் என கனவிலும் நினைக்கவில்லை,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“இதைப் பார்க்கையில் நானும் கொஞ்சம் உழைத்திருக்கிறேன் என எண்ணத் தோன்றுகிறது,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்