தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அனுமதியின்றி படம் எடுத்தால் பிடிக்காது: சாய் பல்லவி

1 mins read
8b06231e-1e7e-4bd3-9028-3dd8b812e815
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

பொது இடங்களுக்குச் செல்லும்போது பலர் அனுமதியின்றி கைப்பேசி மூலம் தன்னைப் படமெடுப்பது தமக்கு அறவே பிடிக்காது என்கிறார் சாய் பல்லவி.

தான் ஒன்றும் அபூர்வமான மரமோ அல்லது பிரம்மாண்டக் கட்டடமோ அல்ல என்றும் உயிருள்ள ஒரு பெண் என்றும் அவர் அண்மையை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அனுமதி பெற்று எடுத்தால் நல்லது.

“என்னைச் சுற்றி பெரிய கூட்டம் இருக்கும்போது, அனைவரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தால் பயமாகவும் கூச்சமாகவும் இருக்கும். இந்த பதற்றத்தைக் கைவிட தினமும் தியானம் செய்கிறேன்,” என்று தெரிவித்துள்ள சாய் பல்லவி, குறைந்த ஒப்பனையுடன் சம்பிரதாய முறைப்படி இருப்பதையே பெரிதும் விரும்புகிறாராம்.

குறிப்புச் சொற்கள்