காதலிப்பது தமக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை ஷ்ருதிஹாசன் கூறியுள்ளார். எனினும் திருமணம் செய்து கொள்வது குறித்து தாம் இன்னும் யோசிக்கவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியுடன் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து பிரபாசுடன் ‘சலார் 2’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே தமது நீண்டநாள் விருப்பமாக இருந்தது என்றும் அது ‘கூலி’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
“ரஜினியுடன் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவரைப் போன்ற அனுபவ நடிகர்களுடன் நடிக்கும்போது பல நுணுக்கங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் நானும் அவரிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
“என்னைப் பார்க்கும் பலரும் திருமணம் குறித்து தான் அதிகம் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காதலிப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் யாருடனாவது இணைந்து வாழ நான் ஆசைப்பட்டாலும் இதுவரை எனக்கு ஏற்ற ஒருவரை இன்னும் சந்திக்கவில்லை.
“இதன் காரணமாக திருமணம் குறித்தெல்லாம் நான் இன்னும் யோசிக்கவேயில்லை. மேலும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆர்வமும் எனக்கு இல்லை,” என்று கூறியுள்ளார் ஷ்ருதிஹாசன்.

