மத்திய கிழக்கிலிருந்து நூலிழையில் தப்பினேன்: சந்தோ‌ஷ் நாராயணன்

மத்திய கிழக்கிலிருந்து நூலிழையில் தப்பினேன்: சந்தோ‌ஷ் நாராயணன்

1 mins read
18778ef2-ad5a-42c4-8bff-d478d63b55ad
கத்தாரிலிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் அமெரிக்கா சென்றதாக இசையமைப்பாளர் சந்தோ‌ஷ் நாராயணன் கூறினார். - படம்: தினத்தந்தி

ஈரானில் நிலவும் பதற்றமான சூழலில் பலரும் சிக்கித் தவிக்கும் நிலையில், நூலிழையில் அங்கிருந்து தப்பிவந்ததாகக் கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான சந்தோ‌ஷ் நாராயணன்.

ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிரடி தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கு வட்டாரங்களில் பதற்றநிலை தலைதூக்கியுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி, அவரது குடும்ப உறுப்பினர்கள், ஈரானின் தற்காப்புத் துறை அமைச்சர் அமீர், ராணுவத் தளபதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானியத் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளது. அந்நாட்டில் உள்ள அமெரிக்கக் கண்காணிப்பு கட்டமைப்பை முழுமையாக அழித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கத்தாரிலிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“விமான நிலையங்கள் அனைத்தும் முழுமையாக மூடப்படுவதற்குமுன் மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்ட கடைசி விமானம் நான் பயணம் செய்த விமானமாகத்தான் இருக்கவேண்டும். இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன்,” என்று சந்தோ‌ஷ் நாராயணன் குறிப்பிட்டார்.

பல மணிநேரம் கழித்து அமெரிக்காவுக்குப் பாதுகாப்பாகச் சென்றடைந்துவிட்டதாகவும் அதே டுவிட்டர் பதிவு வழியாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்