தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்: ராஷி கண்ணா

1 mins read
491dd5b8-9e66-4c8b-b1b4-8060e3d28b0d
ராஷி கண்ணா. - படம்: ஊடகம்

தமக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்கிறார் ராஷி கண்ணா.

இவர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘சபர்மதி ரிப்போர்ட்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

“பிரதமர் மோடியின் பாராட்டு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

“கடவுளை வழிபடுவதுதான் எனக்கு நாள்தோறும் உள்ள முக்கியமான பணி. கடந்த பத்து ஆண்டுகளாக இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறேன்.

“மேலும், கடந்த நான்கு ஆண்டுகளாக, எனது பிறந்தநாளான நவம்பர் 30ஆம் தேதி மரக்கன்றுகளை நடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். இது மனநிறைவைத் தருகிறது,” என்கிறார் ராஷி கண்ணா.

குறிப்புச் சொற்கள்