தாம் நடித்த இரண்டு புதுப் படங்களும் திரை காணாததால் மிகுந்த வருத்தத்தில் உள்ளார் ஆண்ட்ரியா.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு 2’, வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மனுஷி’ ஆகிய இரு படங்களும் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதால் குறித்த நேரத்தில் வெளியாகவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதாகத் தகவல் இல்லை.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆண்ட்ரியாவிடம், இவ்விரு படங்களும் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, தம்மிடம் பதில் இல்லை என்றார் ஆண்ட்ரியா.
“இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளால் முடங்கியுள்ளன. யாராவது இப்படத்தை இணைந்து வெளியிட முன்வந்தால் மகிழ்ச்சி. இரு படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து திரைகாணத் தயாராக உள்ளன,” என்றும் ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
‘மனுஷி’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதாம். ஆனால், அதற்கு உரிய தீர்வு காணப்பட்டுவிட்டதாகத் தகவல்.

