தமிழ் ரசிகர்கள் தங்களில் ஒருவராக தம்மைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார் இளம் நாயகி மமிதா பைஜு.
அவர்கள் தம் மீது அன்பு பாராட்டுவதும் தம்மை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“இப்படிப்பட்ட அன்பையும் ஆதரவையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘டியூட்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் என்னைப் பாசத்துடன் கவனித்துக்கொண்டனர். குறிப்பாக, சரத்குமார் நான் சற்று நேரம் அமைதியாக இருந்தால்கூட உடனே விசாரிப்பார். ‘என்னம்மா, என்ன ஆச்சு’ என்று கேட்பார்.
“யாரும் என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆனால், அவர் மட்டும் சரியாகக் கவனித்து என்னை விசாரிப்பார். அந்த அளவுக்கு என்மீது அன்பு வைத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
“இந்தப் படத்தில் சாய் அப்யங்கருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே கிடைத்த வாய்ப்பு கைகூடாமல் போனதால் வருத்தமாக இருந்தேன். இப்போது கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் மமிதா பைஜு.