நடிப்பதைவிட படங்களை இயக்குவதில் தனக்கு பெரும் மனநிறைவு கிடைப்பதாகச் சொல்கிறார் தனுஷ்.
தனது நடிப்பு சர்ச்சைக்கு தீனி போட்டபடியே படங்களையும் இயக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில், அண்மையில் வெளியான ‘ராயன்’ படம் வசூல் ரீதியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘குபேரா’ என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்’ என்ற படத்தை இயக்குகிறார். முற்றிலும் இளையர்கள் மட்டுமே நடிக்கும் இந்தப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ‘கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தனுஷ் இயக்கும் புதுப்படத்தில் மீண்டும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. மேலும் இந்தப்படத்தில் சத்யராஜையும் நடிக்க வைக்க தனுஷ் முயற்சி மேற்கொண்டுள்ளாராம்.
இரு மூத்த நடிகர்களையும் அவர் அண்மையில் நேரில் சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் உரிய கால்ஷீட் தருவதாக இருவருமே உறுதி அளித்திருப்பதாகவும் தெரிகிறது. தனுஷ் இயக்கத்தில் உருவான ‘பவர் பாண்டி’ படத்தில் ராஜ்கிரண் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வேங்கை’ என்ற படத்தில் அவரது மகனாகவும் நடித்திருந்தார்.
“சினிமா என்பது அற்புதமான கலை. அதில் நாம் கற்றுக்கொள்ள ஏராளமான அம்சங்கள் உள்ளன. நாள்தோறும் நாம் பலவற்றைக் கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம் புதிதாக கற்றுக்கொள்வதற்கு மேலும் பல அம்சங்கள் நாள்தோறும் அறிமுகமாகும் என்பதுதான் திரையுலகின் சிறப்பம்சம்.
“படங்களை இயக்குவதைப் பொழுதுபோக்காகச் செய்யவில்லை. எனக்கு மிகவும் பிடித்தமான பணிகளில் இதுவும் ஒன்று.
தொடர்புடைய செய்திகள்
“திரையுலகில் நான் வெற்றி பெற மிகவும் உதவிகரமாக இருந்த என் அண்ணன் செல்வராகவன், என் தந்தை கஸ்தூரி ராஜா ஆகிய இருவரும் இயக்குநர்களாக முத்திரை பதித்தவர்கள்.
“அவர்கள் வழியில் நானும் ஓரளவு சாதிக்க முடியும் என நம்புகிறேன்,” என்கிறார் தனுஷ்.

