நிறைய கற்றுக்கொண்டேன்: பிரியா வாரியர்

1 mins read
3c5de7e4-8bf2-4e58-bc46-dd00c8db119b
பிரியா வாரியர். - படம்: ஊடகம்

அண்மையில் அஜித், அர்ஜுன் தாசுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

அஜித்திடம் இருந்து ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பின்போது நிறைய கற்றுக்கொண்டதாகவும் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

“மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை. அதேபோல் அதிரடி கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகிறேன்.

“ரசிகர்களின் கவனம் எப்போதும் தன் மீதே இருக்க வேண்டும் என்பதால்தான் சமூக வலைத்தளங்களில் நான் தீவிரமாக இயங்குவதாகக் கூறுகிறார்கள்.

“உண்மையில் நான் என்ன செய்கிறேன் என்பதில்தான் எனது முழுக் கவனமும் உள்ளது,” எனக் கூறியுள்ளார் பிரியா வாரியர்.

குறிப்புச் சொற்கள்