தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நம்மை மீறி ஒரு சக்தி இருப்பதை உணர்ந்தேன்: ரோஜா

1 mins read
942b03b1-ce13-4705-abde-f0518375b97f
குடும்பத்தாருடன் ரோஜா. - படம்: ஊடகம்

“நானும் எனது கணவரும் காதலித்த நேரத்தில் 24 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம்,” என்று நடிகையும் ஆந்திர அரசியல் பிரமுகருமான ரோஜா ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தன் கணவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணியுடன் அளித்த பேட்டியில், தனது குழந்தைகளை உலக நாடுகள் போற்றும் வகையில் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஆனால், அப்போது எனக்குக் குழந்தை பிறக்காது என்று மருத்துவர் சொன்னதால் என் மனம் உடைந்துபோனது. பின், கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகளைப் பரிசாகக் கொடுத்தார்.

“நம்மை மீறி ஒரு சக்தி இருப்பதை அப்போதுதான் நாங்கள் இருவரும் உணர்ந்தோம்,” என அந்தப் பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் ரோஜா.

இந்தப் பேட்டி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

ரோஜாவும் ஆர்.கே.செல்வமணியும் திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது, 2001ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியர்க்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்