‘என்ன விலை’ கதையைக் கேட்டு கண்ணீர் வடித்தேன்: நிமிஷா சஜயன்

‘என்ன விலை’ கதையைக் கேட்டு கண்ணீர் வடித்தேன்: நிமிஷா சஜயன்

1 of 2
படம்: த இந்து
படம்: விகடன்

18 Sep 2026 - 3:49 pm

1 mins read

இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) திரைக்கு வந்தது.

இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ள நிமிஷா சஜயன், படத்தின் கதை குறித்துத் தம்மிடம் இயக்குநர் பேசிய உணர்ச்சிபூர்வமான தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.

“இயக்குநர் என்னிடம் கதையைக் கூறியபோது, எனக்காக எந்தக் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துள்ளார் என்பதை முதலில் தெரிவிக்கவில்லை.

“இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்ததால், இரண்டில் எதை அளித்திருந்தாலும் நான் மகிழ்ச்சியாக ஏற்றிருப்பேன்.

“ஆனால், காஞ்சனா கதாபாத்திரத்தில் நான் நடிக்கப்போவதாக இயக்குநர் சஜீவ் பாழூர் கூறிய நொடியில், உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்,” என நெகிழ்ந்தார்.

சமூகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைப் பின்னணியுடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் ஒருவரின் கதையாகும்.

கண்ணியத்துடனும் வாழ்வாதாரத்திற்காகவும் அவர் நடத்தும் போராட்டம், இறுதியில் ஒரு முக்கியமான சட்டப் போராட்டத்திற்கு வழிவகுப்பதாகக் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

உணர்வுபூர்வமான பயணத்தைக் கொண்ட இத்திரைப்படம் திரைப்பட ரசிகர்களின் மனத்தில் என்றும் நிலைத்து நிற்கும் என நிமிஷா சஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் கருணாஸ், ஷாஷா சிவகுமார், விஜயலட்சுமி வீரமணி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கதைநடிகைஇயக்குநர்திரைப்படம்