கமல்ஹாசன், இன்ஸ்டகிராமில் வெளியிட்ட படம் குறித்து பலர் விமர்சித்து வருகின்றனர்.
முகத்தில் வெளிச்சம் படர்ந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் வெற்றிக்குப் பின் நடிகர் கமல்ஹாசனுக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
‘கல்கி ஏடி’ திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 150 கோடி சம்பளம் பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆனால் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் - 2, தக் லைஃப் திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெறவில்லை. மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்வியைத் தழுவின.
தற்போது, மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் முகத்தில் வெளிச்சம் காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு, “நான் உள்ளிருந்தும் ஒளிர்கிறேன். ஆசான்களுக்கு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.