தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உங்களின் ஆதரவால்தான் நிலைத்து நிற்கிறேன்: மாதவன்

1 mins read
a072e732-4803-44c1-ad25-95083ad11b3f
நடிகர் மாதவன். - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மாதவன் மக்களின் ஆதரவு இல்லை என்றால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி, அண்மையில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், வாழ்க்கையில் தான் பயந்த 2 விஷயங்கள் பற்றி மாதவன் பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், “என் திரை வாழ்க்கையில் நான் 2 விஷயங்களுக்கு பயப்பட்டிருக்கிறேன். ஒன்று, முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது. இரண்டாவது, படம் வெளியாகும் நாள் அன்று.

“25 ஆண்டுகள் சினிமாவில் இருப்பது என்பது எளிதானது அல்ல. மக்களின் ஊக்கம்தான் என்னைத் தொடர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது. அவர்கள் இல்லை என்றால் நான் என்றோ காணாமல் போயிருப்பேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்