இந்தப் பிரபஞ்சத்துக்கும் கடவுளுக்கும் அன்றாடம் நன்றி தெரிவித்த பிறகே தூங்கச் செல்வேன் என்கிறார் ஷ்ருதிஹாசன்.
பரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கையைக் கொண்டிருப்பதால் அனைவரும் கடவுளை மறந்துவிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"குறைந்தபட்சம் நம் குடும்பத்தினருக்காவது நன்றி சொல்வது நம்மை இன்னும் உயர்த்தும் என நம்புகிறேன்," என்று சொல்லும் ஷ்ருதி, கிளாரா என்ற பூனையைச் செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.
பட வேலைகள் ஏதுமின்றி ஓய்வு கிடைத்தால், பெரும்பாலான பொழுதைக் கிளாராவுடன்தான் செலவிடுவாராம்.
"கிளாரா எனது குழந்தை மாதிரி. நான் வீட்டுக்கு வரவில்லை என்றால் செல்லமாகக் கோபம் காட்டுவாள். நான் வீட்டில் இருக்கும்போது என் அருகில் வந்து உட்கார்ந்திருப்பாள்.
"கிளாராவைப் பொறுத்தவரை அவளை ஒரு வளர்ந்த பெண்ணாக மதித்து நடந்துகொள்வேன். அவளுக்கு நான்தான் பூனைக்குட்டி. அவள் வீட்டில்தான் நான் தங்கியிருப்பதாக நினைத்துக்கொள்வேன்.
"அவள்தான் என் முதலாளி. அவளுக்கு ஏற்ற மாதிரிதான் வீடு இருக்க வேண்டும்," என்கிறார் ஷ்ருதிஹாசன்.