காதல் மீது தாம் வைத்துள்ள நம்பிக்கை அந்தக் காதலுக்கும் அப்பாற்பட்டது என்று கூறியுள்ளார் நடிகை கிருத்தி சனோன்.
வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் காதல் தொட்டுச் செல்கிறது என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் காதலை உண்மையாகவே நம்புகிறேன். அது வெறும் காதல் மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் அன்புதான் அடிப்படையானது. எனவே, அன்பு என்கிற அம்சம்தான் வாழ்க்கைக்குத் தேவை,” என்று கூறியுள்ளார் கிருத்தி சனோன்.
தேசிய விருது பெற்ற பிறகு அழுத்தமான, அதே சமயம் வணிக அம்சங்கள் கொண்ட கதாபாத்திரங்களைத் தாம் தேர்வு செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் தனுஷும் கிருத்தி சனோனும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. தற்போது கிருத்தி தொழிலதிபரைக் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.

