கைப்பேசி இல்லாமல் நாள்களை நகர்த்துவது சிரமமாக உள்ளதாக நடிகை ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு கைப்பேசி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கைப்பேசியைப் பயன்படுத்தும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
“மற்ற எல்லாரையும் போலவே, நானும் கைப்பேசியை அதிகம் பயன்படுத்துகிறேன். என்னால் இதைத் தவிர்க்க முடியவில்லை. அதேசமயம் வெளியூர் படப்பிடிப்புகளின்போது கைப்பேசி ‘சிக்னல்’ கிடைக்காத சூழலில் தவிக்க நேரிடுகிறது.
“நமக்கு நெருக்கமானவர்களுடன் பேச முடியவில்லையே, முக்கியமான தகவலைத் தெரிவிக்க முடியவில்லையே என்று மனம் தவியாய்த் தவிக்கிறது.
“அந்தச் சமயத்தில் மட்டும் கைப்பேசியைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கும். ஆனால், கைப்பேசியால் அதிகம் நல்லது நடக்கிறது,” என்றார் ஷ்ருதிஹாசன்.