தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிப்பை உயிராக மதிக்கிறேன்: மேகா ஆகாஷ்

2 mins read
dbc260d1-bc21-449c-8322-1cb45a28c4e3
நடிகை மேகா ஆகாஷ். - படம்: ஊடகம்

திரைத்துறை, இணையத் தளம் என்றெல்லாம் நான் பாகுபாடு பார்ப்பதில்லை. எந்தத் தளமாக இருந்தாலும் தரமான நடிப்பை வழங்கி, திரையுலகில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்று சொல்லும் நடிகை மேகா ஆகாஷ், நடிப்பை தனது உயிராக மதிப்பதாகவும் கூறுகிறார்.

எழிலான நாயகி, பக்கத்துவீட்டுப் பெண் உள்ளிட்ட அனைத்துப் பாத்திரங்களுக்கும் பொருத்தமான நாயகியாக விளங்கும் மேகா ஆகாஷ், தமிழக வார இதழுக்கு மனந்திறந்து பேட்டியளித்துள்ளார்.

“நான் தமிழில் நடித்துள்ள அத்தனை படங்களிலும் இணையத் தொடர்களிலும் சொந்தக் குரலில் ‘டப்பிங்’ பேசியுள்ளேன். தெலுங்கில் இப்போதுதான் பேச ஆரம்பித்துள்ளேன்.

மொழி புரிந்து ஒரு படத்தில் நடிக்கும்போதுதான், இயக்குநர் என்ன நினைக்கிறாரோ அதை நடிப்பில் முழுமையாகக் கொண்டுவர முடியும்.

நான் நடித்துள்ள படத்தில் நானே ‘டப்பிங்’ பேசும்போதுதான் அந்தப் பாத்திரம் உயிரோட்டம் பெறும். அதற்காக ‘டப்பிங்’ பேசும் கலைஞர்களையும் நாம் குறைசொல்ல முடியாது. நம்மை விடவும் அவர்கள் திறமைசாலிகள். எனினும், நாம் ‘டப்பிங்’ பேசி நடிக்கும்போதுதான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும்,” என்கிறார் மேகா ஆகாஷ்.

என் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி, நான் பிறந்தது சென்னை. படிப்பிலும் இந்தி இருந்தது. அதனால், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கில மொழிகளில் சரளமாகப் பேசுவேன் என்பதால், எனது பாத்திரங்களுக்கு நானே குரல் கொடுத்து வருகிறேன்.

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தில் ‘ஸ்மார்ட் போன் செனோரிட்டா’ பாடல் பாட வாய்ப்பு கொடுத்தார் இசை இயக்குநர் லியான் ஜேம்ஸ். இதையடுத்து, அடுத்த பாடலைப் பாடுவதற்காகக் காத்திருக்கிறேன்.

அண்மையில் வெளிவந்த ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்திருந்தார் மேகா ஆகாஷ். பாடகர், இசையமைப்பாளர், நடிகராகக் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் பொறுமையை நான் இதுவரைக்கும் வேறு யாரிடமும் பார்த்ததில்லை. ஒரு நண்பரைப் போல் பழகக் கூடியவர் என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு கப்பலை இயக்கும் மாலுமியின் வேலையைப் போன்றது இயக்குநர் வேலை. அதனைச் செய்ய நிறைய அனுபவம் வேண்டும். அதனால் அந்த சிக்கலான காரியத்தில் எல்லாம் ஈடுபட மாட்டேன்.

எனது வருங்காலக் கணவர் நல்லவராக இருக்கவேண்டும். நம்மை அடக்கி ஆள நினைக்கக் கூடாது. ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும். இந்தத் தன்மைகள் இருந்தால் போதும் என நினைக்கிறேன்.

தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்துக்கொண்டு உள்ளேன். ஆனால், இப்போதைக்கு அவற்றின் பெயர்களைச் சொல்லமுடியாது. விரைவில் அறிவிப்பு வரும் என்கிறார்.

ரொம்ப ஜாலியாக சல்மான்கானுடன் ‘ராதே’ படத்தில் நடித்துள்ளேன். மிகப்பெரிய பாலிவுட் நடிகராக இருந்தாலும் ஒரு நண்பரைப் போல் அவர் எல்லாரிடமும் ஜாலியாகப் பழகுவார் என்கிறார் மேகா ஆகாஷ்.

குறிப்புச் சொற்கள்