‘மகாநதி’ படத்தில் நடிக்க தாம் முதலில் மறுத்துவிட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் (படம்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள அண்மைய பேட்டியில், பழம்பெரும் நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிக்க தாம் பயந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இயக்குநர் நாக் அஸ்வின் ‘மகாநதி’ கதையை விவரித்தபோது உண்மையாகவே பயந்து விட்டேன். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் என்னிடம் கேட்டபோது, எனது கதாபாத்திரத்தை சரியாக திரையில் கொண்டுவர முடியுமா என சந்தேகமாக உள்ளது என்றேன்.
“ஆனால் தயாரிப்பாளர்கள் நான் சொன்னதை ஏற்கவில்லை. அதன் பின்னர் அனைவரும் தந்த ஊக்கத்தால் அப்படத்தில் நடிக்க முடிவெடுத்தேன்,” என்று கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.