வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்: பிக்பாஸ் சக்தி வேதனை

1 mins read
38d95b5f-f21b-40aa-b8a3-ca69cfab6d96
சக்தி. - படம்: ஊடகம்

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதுதான் வாழ்க்கையில் தாம் செய்த மிகப்பெரிய தவறு என்கிறார் நடிகர் சக்தி.

இயக்குநர் பி.வாசுவின் மகனான இவர், அண்மைய பேட்டி ஒன்றில், தாம் வாழ்க்கையில் எதிலும் தோற்றதில்லை என்றும் திரையுலகுக்கு வந்த பிறகுதான் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று இவரது தந்தை கூறினாராம். ஆனால் பிடிவாதமாக இருந்து தாம் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நான் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வந்த பிறகு பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டது. பல குழப்பங்களுக்கு ஆளானேன்.

“அதனால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் முடங்கிக் கிடந்தேன்,” என்கிறார் நடிகர் சக்தி.

குறிப்புச் சொற்கள்