‘16 முறை பார்த்தேன்!’ - ‘நாயகன்’ மறுவெளியீட்டுக்கு நீதிபதி அதிரடி உத்தரவு; தடை இல்லை

2 mins read
1d55a943-108f-46b1-a31a-ce442c924b1c
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார். - படம்: இந்திய ஊடகம்

கமலின் ‘நாயகன்’ படத்தின் மறுவெளியீட்டுக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், கமல் ரசிகராக மாறிப் பேசியது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு முன்னோடி, 1987-ல் வெளியான ‘நாயகன்’ படம். மணிரத்னம்-கமல், பி.சி.ஸ்ரீராம் கூட்டணியில் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம் நாயகன். வேலு நாயக்கர் கதாபாத்திரமாகவே கமல் வாழ்ந்திருப்பார். இளையராஜாவின் 400வது படம் என்ற சிறப்பும் ‘நாயகனுக்கு’ உண்டு.

இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற ‘நாயகன்’, கமலின் பிறந்தநாளை முன்னிட்டு மறுவெளியீடு கண்டது.

இந்நிலையில், ‘நாயகன்’ திரைப்படத்தை எனது நிறுவனம், ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து படம் வெளியிடும் உரிமையை கடந்த 2023ஆம் ஆண்டு பெற்றது. இதை மறைத்து வி.எஸ்.ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ‘நாயகன்’ திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இது முறைகேடான நடவடிக்கை. எனவே ‘நாயகன்’ திரைப்படத்தை உடனே நிறுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று எஸ்.ஆர்.ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ஆர்.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில் குமார் முன்பு மனுதாரர் தரப்பு முறையீடு செய்திருந்தது. அதன்படி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், “இந்தப் படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன். இதன் காட்சிகளை என்னால் இப்போதும் விவரிக்க முடியும். எனவே ‘நாயகன்’ திரைப்படத்தை மறுவெளியீடு செய்யத் தடை விதிக்க முடியாது,” என்று கூறியது கமல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்