தமிழில் `நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘துப்பறிவாளன்’ ஆகிய படங்களில் நடித்தார் அனு இமானுவேல். அதன்பிறகு ஏனோ அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் வாய்க்கவில்லை.
தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வந்த அவர், வாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கவர்ச்சி காட்டி நடிக்கத் தொடங்கினார். ஆனாலும் பலன் இல்லை.
ஏற்கெனவே, மலையாளத் திரையுலகைவிட்டு ஒதுங்கியிருந்த அனுவுக்கு மீண்டும் வாய்ப்புகள் வர, மலையாளம் பக்கம் திரும்பி வந்துவிட்டார். துல்கர் சல்மான் உட்பட மூன்று பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இரண்டாவது சுற்றில் நிச்சயமாகச் சில வெற்றிப் படங்களைக் கொடுக்க இயலும் என நம்புவதாக உறுதியாகச் சொல்கிறார் அனு.

