தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமந்தாவைப் பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்: நாக சைதன்யா

1 mins read
459334fa-88b1-4872-bf57-be9a16d79f5c
சோபிதா துலிபாலா, நாக சைதன்யா. - படம்: ஊடகம்

சமந்தா உடைந்து போயிருப்பதால் அவரைப் பார்த்தால் கட்டிப்பிடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நாக சைதன்யா.

நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி இந்த ஜோடிக்கு பிரபலங்கள், வலைத்தளவாசிகள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாக சைதன்யா அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் அவர் அளித்த பேட்டியின்போது, “இப்போது சமந்தாவைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், “இப்போது அவரைப் பார்த்தேன் என்றால் ஒரு ‘ஹாய்’ சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன். காரணம், அவர் மிகவும் உடைந்து போயிருக்கிறார்,” என்றார்.

சோபிதாவுடன் திருமணம் நடக்க உள்ள நிலையில், முன்னதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்து சமந்தாவின் கடைசிப் புகைப்படத்தையும் சைதன்யா நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்