தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன்: மிஷ்கின்

1 mins read
1d4659ec-569a-4d94-aff9-63f529e41f7e
இயக்குநர் மிஷ்கின் - படம்: சமூக ஊடகம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வியாழக்கிழமை (பிப்ரவரி 13) சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கினும் கலந்து கொண்டார்.

தொகுப்பாளர்கள் மேடையில் இருந்த திரையில் படக்குழுவினர் ஒவ்வொருவரின் புகைப்படங்களாகக் காட்டி இயக்குநர் மிஷ்கினிடம், அவர்கள் குறித்து ஒரு வரியில் கருத்து கேட்டனர்.

அதில் மிஷ்கினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அது குறித்து கருத்து தெரிவித்த அவர், “விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்” என்று ஒருவரியில் பதில் கூறிவிட்டு சென்றார்.

இந்த திடீர் கருத்து அவரது ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்