நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் ‘LIK’, கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ உள்ளிட்ட படங்களை அவர் கைவசம் வைத்து இருக்கிறார்.
மேலும் விரைவில் அவர் இந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் கீர்த்தி ஷெட்டி பான் இந்தியா நடிகையாக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
கீர்த்தி ஷெட்டிக்கு தற்போது 21 வயதாகிறது. அவரது அழகுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது கீர்த்தி அளித்த பேட்டி ஒன்றில், தனது அழகின் ரகசியம் என்ன என்பது பற்றி கூறி இருக்கிறார்.
“நான் சர்க்கரை சாப்பிட மாட்டேன். சர்க்கரை எடுத்துக்கொள்ளாததால் எனது தோலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைவிட இது ரொம்ப சிறப்பாக இருக்கிறது. உடல் எடையும் ஒரே சீராக இருக்கிறது. நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது,” எனக் கூறி இருக்கிறார் கீர்த்தி.

