தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

யாசகம் கேட்கவேண்டிய நிலை வந்தாலும் வடிவேலுடன் நடிக்க மாட்டேன்: சோனா

1 mins read
65bcc1b1-ebb0-45c2-ab51-c401d3cb43c1
வடிவேலு, சோனா, - படம்: ஊடகம்

யாசகம் கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும், இனி தாம் நடிகர் வடிவேலுடன் இணைந்து நடிக்க வாய்ப்பில்லை என நடிகை சோனா தெரிவித்துள்ளார்.

இருவரும் ரஜினிகாந்தின் ‘குசேலன்’ படத்தில் இணைந்து நடித்தனர்.

இந்நிலையில், ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும், வடிவேலுக்கு ஜோடியாக தம்மால் நடிக்க இயலாது என்று கூறியுள்ளார் சோனா.

“முன்பு குசேலன் வெளியான பிறகு, வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், அவற்றை நான் ஏற்கவில்லை.

“ஒருவேளை வாய்ப்புக்காக கெஞ்ச வேண்டிய நிலை, வாழ்க்கையை நடத்த யாசகம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட அவருடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தால் நிராகரிப்பேன்,” என்று கூறியுள்ளார் சோனா.

இருவருக்கும் இடையே என்ன பிரச்சினை என்பது குறித்து இதுவரை இருவருமே வாய்திறக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்