நடித்தால் கதாநாயகிதான்: அடம்பிடிக்கும் மேக்னா ராஜ்

1 mins read
712b5075-ffc5-40b8-aa19-4c13033790a5
கணவர் சிரஞ்சீவி சார்ஜாவுடன் மேக்னா ராஜ். - படம்: ஊடகம்

தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வந்த நடிகை மேக்னா ராஜ், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், மேக்னா கர்ப்பிணியாக இருந்தபோது, கணவர் மாரடைப்பால் இறந்துபோனார்.

இந்நிலையில், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மேக்னா ராஜ், தற்போது மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

குறிப்பாக, மலையாளத்தில் சுரேஷ் கோபியின் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ்த் திரையுலகில் மீண்டும் கால்பதிக்க விரும்புகிறார் மேக்னா. அதற்காக, பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார்.

அதோடு, இந்திய நடிகைகளைப் போன்று திருமணம், குழந்தை பிறப்புக்குப் பிறகும் கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என அனைவரிடமும் அடித்துச் சொல்லி வருகிறார் மேக்னா ராஜ்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்