நட்சத்திர இணையரான நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக அண்மையில் ஒரு தகவல் வெளியானது. ஆனால், ஆதி அதனை மறுத்துள்ளார்.
தற்போது அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த ‘சப்தம்’ திரைப்படம் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில், திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் சேர்ந்துதான் புதுப் படத்துக்கான கதையைத் தாம் கேட்பதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமாக நடிக்க வேண்டியிருந்தால் முன்கூட்டியே என் மனைவி நிக்கியிடம் அது குறித்து சொல்லிவிடுவேன்.
“அவரும் திரைத்துறையில் இருந்தவர் என்பதால் புரிந்துகொள்வார். அதேசமயம் கதைக்குத் தேவையற்ற காட்சிகளை அவர் ஒப்புக்கொள்ள மாட்டார்,” என்றார் ஆதி.