தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிடைத்த வாய்ப்புகளை வைத்து முன்னேறுவேன்: கயாது லோஹர்

1 mins read
4d55c334-3e2d-4884-80d6-5e5723e633b0
கயாது லோஹர். - படம்: ஊடகம்

‘டிராகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, அப்படத்தின் நாயகி கயாது லோஹருக்கு மளமளவென புதுப் பட வாய்ப்புகள் குவிந்தன.

சிம்பு, தனுஷ் என பல முன்னணி நாயகர்களுடன் அவர் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகவே, மற்ற இளம் நாயகிகள் அவரது வளர்ச்சியைக் கண்டு கவலைப்படுவதாகக் கூறப்பட்டது.

ஒரு கட்டத்தில், சமூக ஊடகங்கள் மூலம் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகப் புலம்பினார் கயாது.

இந்நிலையில், யார் கண் பட்டதோ தெரியவில்லை. சிம்பு, தனுஷுடன் நடிக்க ஒப்பந்தமான இரண்டு படங்களும் கைவிடப்பட்டுள்ளன.

ஒரு படத்தில் கயாதுக்குப் பதில் வேறு நாயகியை ஒப்பந்தம் செய்துள்ளனராம். மற்றொரு படத்தை சில காரணங்களால் அதன் தயாரிப்புத்தரப்பு கைவிட்டுள்ளதாம்.

இந்நிலையில், அதர்வா, ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரும்தான் கயாதுவுக்குக் கைகொடுத்துள்ளனர். இருவருக்கும் ஜோடியாக கயாது நடிக்கும் படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

“சினிமா ரசித்துப் பணியாற்ற வேண்டிய ஒரு துறை. அவ்வாறு இல்லாமல், ஓட்டப்பந்தயம் போல் கருதி, மற்றவர்களுடன் போட்டி போட்டால் அது சரிப்பட்டு வராது.

“எனவே, சில வாய்ப்புகள் கைகூடாவிட்டால் கவலைப்பட மாட்டேன். கிடைத்த வாய்ப்புகளை வைத்து முன்னேறுவேன்,” என்கிறார் கயாது லோஹர்.

குறிப்புச் சொற்கள்