மீண்டு வருவேன்: உறுதியளித்த நஸ்‌ரியா

2 mins read
dfd52ea6-7f0a-474e-9410-ea7ba540172e
நடிகை நஸ்‌ரியா. - படம்: இந்திய ஊடகம்

நீண்டநாள்களாகப் பொதுவெளியில் வராமல் இருந்ததற்கு நடிகர் ஃபஹத் ஃபாசிலின் மனைவியான நடிகை நஸ்ரியா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மனந்திறந்துள்ளார்.

“நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சில நாட்களாக எங்கும் வரவில்லை என்று உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த அற்புதமான சமூகத்தில் நான் எப்போதும் ஒரு சுறுசுறுப்பான உறுப்பினராக இருந்துள்ளேன். இது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால், கடந்த சில மாதங்களாக, என் மனநலம் மற்றும் தனிப்பட்ட சவால்கள் காரணமாக நான் மிகவும் கடும் துன்பத்துக்கு ஆளானேன்.

“எனது 30வது பிறந்தநாளையும் புத்தாண்டையும், ‘சூக்‌ஷ்மாதர்ஷினி’ படத்தின் வெற்றியையும் இன்னும் பல முக்கியமான தருணங்களையும் என்னால் கொண்டாட முடியாமல் போனது. நான் ஏன் காணாமல் போனேன் என விளக்கம் தராததற்கும் அழைப்புகளை ஏற்காததற்கும் குறுஞ்செய்திகளுக்குப் பதில் அளிக்காததற்கும் நண்பர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் ஏற்படுத்தியிருக்கும் கவலை அல்லது சிரமத்திற்கு நான் உண்மையிலேயே வருந்துகிறேன்.

“இந்நிலையில், ஒரு நேர்மறை விஷயமாக, சிறந்த நடிகருக்கான கேரளத் திரைப்பட விமர்சகர்கள் விருதைப் பெற்றதைப் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து அங்கீகாரங்களுக்கும் மிக்க நன்றி மற்றும் சக போட்டியாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகள்.

“இது ஒரு சவால்மிக்கப் பயணம். ஆனால் குணமடைவதில் நான் ஒவ்வொரு நாளும் கவனம் செலுத்துகிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இந்த நேரத்தில் உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் நான் நன்றி கூறுகிறேன். முழுமையாகத் திரும்பி வர எனக்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படலாம். ஆனால் நான் மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.

“உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். விரைவில் மீண்டும் இணைவோம். என்னோடு இருந்ததற்கும் உங்கள் முடிவில்லாத ஆதரவுக்கும் நன்றி” என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்