ஒரு நடிகையாக திரையுலகில் வெற்றி பெற, கவர்ச்சி தேவையில்லை என்கிறார் நடிகை நிதி அகர்வால்.
தம்மால் முத்தக் காட்சியிலும் நீச்சல் உடையிலும் நடிக்க இயலாது எனத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழில் சிம்புவின் ‘ஈஸ்வரன்’, உதயநிதியுடன் ‘கலகத் தலைவன்’ படங்களில் நடித்தவர் நிதி அகர்வால். தற்போது தெலுங்கில் பவன் கல்யாணுடன் ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அண்மைய பேட்டியில், கவர்ச்சியான, ஆபாசமான காட்சிகளில் தம்மால் நடிக்க இயலாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பெற்றோருடன் அமர்ந்து பார்க்கும் வகையில் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் கவர்ச்சி காட்டாமலும் வெற்றிபெற முடியும்.
“இதை நான் சும்மா சொல்லவில்லை. எனக்கு முன்பு அனுபவ ரீதியில் இந்த உண்மையைப் புரிந்துகொண்டு பல நடிகைகள் கூறியுள்ளனர்,” என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் நிதி அகர்வால்.
அதேசமயம், ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில், இவர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியுள்ளாராம்.
தற்போது ‘பாகுபலி’ பிரபாஸ் ஜோடியாக, ‘தி ராஜாசாப்’ படத்தில் நடித்து வருகிறார் நிதி.