நூறு விழுக்காடு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்: நித்யா மேனன்

1 mins read
f1140d0b-c56b-474d-9b41-8c053762150c
நித்யா மேனன். - படம்: ஊடகம்

காதல், கல்யாணம் ஆகியவற்றில் தனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளார் நித்யா மேனன்.

அண்மையில் அவர் அளித்த பேட்டியில், தற்போது தாம் திரைத்துறையில் இருப்பதை காலம்தான் நிர்ணயித்துள்ளது என்றும் அது எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கூறியுள்ளார்.

“நான் திரைத்துறையில் கால்பதித்தது எதேச்சையாக நடந்த விஷயம். பணம், புகழ், பெருமை ஆகியவற்றுக்காக ஆசைப்பட்டு நான் சினிமாவில் நுழையவில்லை. சினிமாதான் என் கனவு, லட்சியம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

“நான் எப்போது வேண்டுமானாலும் திரைத்துறையில் இருந்து விலகிவிடுவேன். எனினும், இதில் இருக்கும் வரை நூறு விழுக்காடு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவேன்.

“வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில்லை. படப்பிடிப்புத் தளத்தில் முழுக் கவனத்துடன் நடிப்பேன். வீட்டுக்குச் சென்றபின் மற்ற பணிகளைக் கவனிப்பேன்,” என்கிறார் நித்யா மேனன்.

குறிப்புச் சொற்கள்