சென்னை: தனுஷ் இயக்கத்தில் வெளிவரவுள்ள நான்காவது படம் ‘இட்லி கடை’.
இது, தனுஷ் நடிக்கும் 52வது திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘இட்லி கடை’யை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அக்டோபர் ஒன்றாம் தேதி படம் வெளியாகிறது.
இந்நிலையில், கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘இட்லி கடை’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லர் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இப்படத்தின் கதை மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறுபோல் உள்ளது என்று இணையவாசிகள் கிண்டலடித்துவருகின்றனர்.
குறிப்பாக டிரெய்லரில் தனுஷ் இருக்கும் புகைப்படங்களோடு மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படங்களை இணைத்து இணைவாசிகள் பதிவிட்டது பரவி வருகிறது.
நடிப்பில் முத்திரை பதித்துள்ள தனுஷ், இப்போது இயக்குநராகவும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷின் இயக்கத்தில் வெளியான ‘பா பாண்டி’ மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்த அப்படம் தனுஷ் இயக்கிய முதல் படமாகும்.
தனுஷின் சகோதரரான செல்வராகவன், தந்தை கஸ்தூரி ராஜா இரவரும் பிரபல இயக்குநர்கள் ஆவர்.