தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தல வந்தால் தள்ளித்தான் போகவேண்டும்’: பிரதீப்

1 mins read
749be535-adbe-4421-ab04-7e30aa477d22
‘டிராகன்’ படக்காட்சி. - படம்: ஊடகம்

‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.

‘டிராகன்’ பிப்ரவரி 21ஆம் தேதி வெளிவரும் என்று அறிவித்துள்ள பிரதீப், “தல வந்தால் தள்ளிப் போய்தான் ஆகவேண்டும்,” என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதனும் நாயகியாக அனுபமா பரமேஸ்வரனும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் காதலர் தினத்தையொட்டி பிப்ரவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ளதால், பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ‘டிராகன்’ படத்தை ஒத்திவைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்