உள்ளம் அழகானால் மேனியும் அழகாகும்: ராஷ்மிகா மந்தனா

உள்ளம் அழகானால் மேனியும் அழகாகும்: ராஷ்மிகா மந்தனா

1 mins read
f9be10ab-b375-46fe-bde2-9ae6063feb1e
தனது செல்லப்பிராணியுடன் ராஷ்மிகா. - படம்: பின்டர்ரஸ்ட்

நமது ஆழ்மனம் தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாகத் தெரிவோம் என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா, அண்மையில் தமது காதலரும் நடிகருமான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் பரபரப்பாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இது தவிர ஒரு புதிய படத்தில் ஒன்றாக இணைந்து இருவரும் நடிக்கிறார்கள்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம், ‘உங்கள் பளபளப்புக்கு என்ன காரணம்’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ராஷ்மிகா, “உள்ளம் அழகானால் மேனியும் அழகாகும். என்னதான் விதவிதமான அழகுச் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் விதவிதமான ஆடைகளை அணிந்தாலும் நமது ஆழ்மனம் தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாகத் தெரிவோம்.

“வாழ்நாளில் முடிந்தவரை பிறருக்கு நன்மைகளைச் செய்து வாழ வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்கள் நம் காலம் முடிந்த பிறகும் நம்மைப் பற்றி பேச வைக்கும்,” என்றார்.

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது செல்லப்பிராணிகளைக் கொஞ்சி மகிழ்வதை பொழுதுபோக்காக ராஷ்மிகா வைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்