‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்பதே தலைப்பு: அஸ்வத் மாரிமுத்து

‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்பதே தலைப்பு: அஸ்வத் மாரிமுத்து

1 mins read
864b188a-55ac-458c-a601-b095416df95d
அஸ்வத் மாரிமுத்து. - படம்: விகடன் சினிமா
Google News Preferred Icon

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் திட்டங்கள் எதுவும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை என்றபோதிலும், அது தொடர்பான எண்ணமே தமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.

அவ்வாறு ஒரு படத்தை உருவாக்கும் வாய்ப்பு தமக்குக் கிடைத்தால், அதற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ எனத் தலைப்பிட விரும்புவதாகக் கூறியுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

அண்மையில் திரைத்துறை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், அதற்கான திரைக்கதை அமைப்பு குறித்தும் சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்தார்.

அதன்படி, படத்தின் முதல் பாதியை விஜய்யின் திரைப்பயணம், அவரது சாதனைகளை மையமாகக் கொண்டும், தீவிர அரசியலில் அவர் களமிறங்கும் தருணத்தை படத்தின் முக்கியமான இடைவேளைக் காட்சியாகவும் அமைக்க விரும்புவதாகக் கூறினார்.

இரண்டாம் பாதியில் விஜய்யின் அரசியல் பிரவேசம், மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

குறிப்புச் சொற்கள்