சென்னை ஐஐடியில் ‘இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்

சென்னை ஐஐடியில் ‘இளையராஜா இசை ஆராய்ச்சி மையம்

1 of 2
கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா
கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

03 Oct 2026 - 4:35 pm

1 mins read

சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘இசைஞானி இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை’ எதிர்வரும் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அதிகாரபூர்வமாக திறந்துவைக்க உள்ளார்.

அன்று சென்னை வரும் பிரதமர், பூந்தமல்லி-வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கிவைத்து, மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்கிறார்.

தொடர்ந்து சாலை வழியாக சென்னை ஐஐடி செல்லும் அவர், அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், இசை மையத்தைத் திறந்து வைக்கிறார்.

கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை ஐஐடி, இளையராஜாவின் இசை நிறுவனத்திற்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இம்மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்திய இசையின் தொழில்நுட்ப அம்சங்கள், பாரம்பரியம், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இந்த மையத்தின் பணிகள் தற்போது முழுமையடைந்துள்ளன.

இசை, தொழில்நுட்பத் துறையின் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும் இந்தத் திறப்பு விழா, திரையுலகினரிடமும் இசைப்பிரியர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்